பிணையா விளக்கமறியலா! நூல் வெளியீட்டு விழா

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.மொஹைதீன் எழுதியுள்ள 'பிணையா விளக்கமறியலா' என்னும் நூல் வெளியீட்டு விழா நாளை(13) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நாளை மாலை 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் இலங்கை சோசலிச குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நெஷாத் , மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஷடீன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரெட்ன மாரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, தமிழில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த 'பிணையா விளக்கமறியலா' என்னும் நூல் அனைவருக்கும் பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.