வாகன விபத்தில் 12 பேர் காயம் - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல்

Report Print Vethu Vethu in சமூகம்

கேகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, மிபிட்டிய, கரடுபண பிரதேசத்தில் லொரிகள் இரண்டும் வேன் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை தீவிரமல்ல என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.