சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

அம்பலாந்தோட்ட, ருகுணு ரிதியகம தியவர என்ற கிராமத்தில் வீடொன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்ததாக கூறப்படும் பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபடும் சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 6 பெண்களையும் கைது செய்துள்ளனர்.

அம்பலாந்தோட்ட பொலிஸார் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் 55 வயதான பெண் எனவும், ஏனையோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண்களில் கர்ப்பிணி ஒருவரும், பால் குடிக்கும் குழந்தையும் இன்னொரு பெண்ணும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பெண்களும் திருமணமானவர்கள் எனவும், அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பதாகவும், இவர்களின் கணவன்மார் பல்வேறு தொழில்களை செய்து வருவதுடன் இந்த பெண்கள் வெவ்வேறு இடங்களில் தங்க வைத்து விட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சூதாட்ட நிலையத்தில் இருந்து ஆயிரத்து 500 ரொக்கம், சீட்டுகட்டு என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது இந்த பெண்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை பொலிஸார் நேற்றைய தினமே பிணையில் விடுத்துள்ளனர்.