அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு எதிராக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரி இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 20 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அதனை துரிதப்படுத்துமாறு கோரியே இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.