யாழ்ப்பாணத்தில் 27 இந்தியர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு விசாரணைப் பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 பேர் சாஸ்திரம் கூறும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் 6 பேர் வர்த்தகம் செய்து வந்துள்ளனர்.

மேலும் இரண்டு பேர் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களில் ஒரு விஞ்ஞானப் பட்டாரி இருப்பதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.