ஒரு இலட்சத்து 70 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம - கல்லெலிய பகுதியில் வைத்து மீரிகம பொலிஸாரால் அவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வான் ஒன்றில் குறித்த சிகரெட்டுக்களை கொண்டு சென்றபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி மற்றும் நிட்டம்புவ பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 57 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.