வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் காயம்

Report Print Kamel Kamel in சமூகம்

வாகன விபத்துச் சம்பவமொன்றில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

தலங்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று, மீண்டும் பல்கலைக்கழக விடுதி திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்திலேயே மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

காயமடைந்த மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 11.20 அளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் பயணம் செய்த பேருந்து, மோட்டார் வாகனமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நாவின்ன சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது பேருந்தில் 65 மாணவர்கள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் பேருந்து மற்றும் மோட்டார் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement