சிறப்பாக இடம்பெற்ற மறைக்கல்வி கலை நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

மாந்தை - மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி கிராமத்தில் இந்த வருடத்திற்கான மறை கலை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மறைக்கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மூன்றாம் பிட்டி குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், சிறப்பு விருந்தினராக வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.லக்ஸ்ரன் டீ சில்வா மற்றும் இந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்,இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதோடு பரிசளிப்பு நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.