விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர், கொம்மாந்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனரான கொம்மாதுறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுகுமாரன் என்பவர் படுகாயமடைந்திருந்தார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.