புலம்பெயர் தொழிலாளர்கள் 23பேருக்கு 6.7 மில்லியன் ரூபா இழப்பீடு

Report Print Ajith Ajith in சமூகம்

வெளிநாடுகளில் பணி புரிந்த 23 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 6.7 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவால் நேற்று முன்தினம் (06)அமைச்சில் வைத்து குறித்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் இந்த இழப்பீடு கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பதிவு செய்யப்பட்ட ஆனால், காப்புறுதித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கே, தொழிலாளர் நலன் நிதியத்தால் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகளை வழங்க அரசாங்கம் கடப்பாடுடையதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுளள்ளதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகளை வழங்க அரசாங்கம் கடப்பாடுடையதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

advertisement