இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு

Report Print Victor in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தால் நடத்தப்படும் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் திருகோணமலை வளாக முதல்வர் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வளாக முதல்வர் கனகசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா, தென்னாபிரிக்கா, சுவிற்சலாந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் எமது நாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இந்த கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும், கௌரவ அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரோசிரியர் மொகான் டீ சில்வாவும், விசேட அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கமும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை விஞ்ஞானமும் தொழிநுட்வியலும், மருத்துவம் மற்றும் சுகாதார விஞ்ஞானம், விவசாயம் மற்றும் சுற்றாடல் அறிவியல், சமகால முகாமைத்துவம், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள், தொடர்பாடல், அழகியல், மொழி, இலக்கியம், சமூக விஞ்ஞானம், கலாச்சார பாரம்பரியம் என்னும் பிரதான தலைப்புகளை முதன்மைப்படுத்தி ஆய்வு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், சமகால பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய வேலைவாய்ப்புகள் என்ற ஆய்வுப்பொருளில் அறிவியல் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது சர்வதேச மாநாட்டின் தொடர்ச்சியாக இவ்வருடம் இந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகம் நடத்தும் நாளைய நலனுக்காக மூலவளங்களைப் பயன்படுத்தல் என்னும் தலைப்பிலான 2வது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் புதன்(13) மற்றும் வியாழன்(14) கிழமைகளில் நடைபெறவுள்ளன.

இதன்போது சமர்ப்பிப்பதற்கென 100 இற்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதில் இருந்து 66 ஆய்வு கட்டுரைகள் மாத்திரம் மாநாட்டில் வாசிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.