தங்கத்தை எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் விமானநிலையத்தில் வைத்து கைது!

Report Print Steephen Steephen in சமூகம்

52 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க கட்டிகளை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் மதுரை நோக்கி புறப்பட்டுச் செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று சென்றிருந்த 30 வயதான இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தின் பெறுமதி மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 765 ரூபா என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைப்பற்றிய தங்கம் அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து கடல் வழியாகவும், விமானங்கள் மூலம் தொடர்ந்தும் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.