பிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞன்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் சேவை செய்யும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற பிரித்தானிய பெண்ணிடம், குறித்த இளைஞர் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

31 வயதான போட் எலிசபெத் என்ற பிரித்தானிய பெண் இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபர் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிரித்தானிய பெண் ஆடை ஒன்றை கொள்வனவு செய்வதற்காக தனது கணவருடன் அங்கு சென்றுள்ளார்.

இங்கு ஆடை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பெண் தனது இடுப்பு பட்டியில் பிரச்சினை உள்ளதாகவும், அதனை சரி செய்து விடுமாறும் குறித்த இளைஞனின் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் பெண்ணின் இடுப்பு மற்றும் பின்புறத்தை அழுத்தி பிடித்துள்ளார். அதன் போது கூச்சலிட்ட பெண் அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை விபரித்துள்ளார்.

உரிமையாளர் அந்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தை சேர்ந்த இளைஞராகும். சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.