விபத்தில் முற்றாக நொருங்கிய கார்! தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

Report Print Suman Suman in சமூகம்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து உமையாள்புரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டர் (டிப்பர்) மீதும் கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

எனினும், தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவ்வித உயிர் சேதங்களோ ,காயங்களோ ஏற்ப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்திற்கான காரணம் பேருந்து சாரதியின் அதிவேகமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement