வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிக்கு ஏற்பட்ட கதி - பரிதாபமாக உயிரிழப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளி, 3 பாதுகாவலர்களின் செயற்பாட்டால் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்கு சென்ற நோயாளியை மூன்று பாதுகாவலர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு வெளியே இழுத்து சென்று கீழே தள்ளியுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதன்போது அதிர்ச்சியடைந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை அவதானித்த பிரதேச மக்கள் சிலாபம் வைத்தியசாலையில் அவரது சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் சாதாரண மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை விடுவிப்பதற்கு சிலாபம் வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார். எனினும் பொலிஸார் தலையிட்டு அதனை நிறுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிலாபம் மாவட்ட நீதவான் ஹேஷாந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

சிலாபம், ஜுலியன் தோட்டத்தை சேர்ந்த ஜுட் பிரென்சிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராகும்.

குறித்த மூவரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

advertisement