கொள்ளுப்பிட்டியில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கொள்ளுப்பிட்டியில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியை சுற்றி வளைத்து 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரினால் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விபச்சார விடுதியின் நிர்வாகியாக செயற்பட்ட பெண், அதனை நடத்தி செல்வதற்கு உத்தரவு வழங்கிய நபர் மற்றும் விபச்சார சேவையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 61 வயதானவர் எனவும், நிர்வாகியாக செயற்பட்டவர் 55 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஏனைய பெண்கள் 26, 28, 32, 37, மற்றும் 49 வயதுடையவர்களாகும். அவர்கள் கந்தான, பண்டாரவளை, பிலியந்தலை, பன்னிப்பிட்டிய மற்றும் பாணந்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.