சீரற்ற காலநிலையால் உடைந்து வீழ்ந்த கிறிஸ்தவ தேவாலயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - செனன் பகுதியின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், 31.05.1987 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான மறைக்கல்வி நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

ஹட்டன் பகுதியில் பெய்து வந்த கடும் மழையில் பல்வேறு கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டும், மண்சரிவுகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தேவாலயத்தின் சுவர்கள் இடிந்தும், கூரைகள் உடைந்தும் வீழ்ந்துள்ளதுடன், ஒரு பகுதி சுவர் சாய்ந்த நிலையில், தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சொரூபத்தில் பகுதியளவு சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.