ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை - ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அதே தோட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணியளவில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்கள் காடுகளாக்கியுள்ள நிலையில் அதை சுத்தம் செய்வதற்கு ஒலிரூட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இருப்பினும் 18 கிலோவிற்கும் அதிகமாக தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வலியுறுத்துவதனால் அங்கு ஏற்பட்ட முறுகள் நிலையை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும், முறுகள் நிலையும் தோன்றியுள்ளது.

அத்துடன், தோட்டத்தின் தேயிலைக் காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது. ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை நிலங்களை சுத்தம் செய்து கொடுப்பதில் அக்கரை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாளொன்றுக்கு 18 கிலோவிற்கு அதிகமாக தேயிலை கொழுந்தை கொய்து தரும்படி தோட்ட நிர்வாக அதிகாரி வழியுறுத்துகிறார். இதனால் தாம் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.