சட்டவிரோத போதைப்பொருள் பொதிகளுடன் நபரொருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த ஒருதொகை மாவா போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிரடிப்படையினரும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் நேற்று மாலை கொட்டகலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதி செய்யப்பட்ட 12 மாவா போதைப்பொருள் பொதிகளுடன் மாவா போதைப்பொருள் தயாரிப்பதற்காக வைத்திருந்த 500 கிராம் புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.