துபாயில் பெருந்தொகைப்பணத்தை மோசடி செய்த இலங்கையர்கள் கைது

Report Print Aasim in சமூகம்

துபாயில் பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்த இலங்கையர்கள் மூன்று பேர் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயின் நிதிநிறுவனம் ஒன்றில் பணியாற்றிய மூன்று இலங்கையர்களிடம் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு லட்சம் திர்ஹம்களை ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்புச் செய்யாது அவர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த அவர்கள் பணியாற்றிய நிதிநிறுவனம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், எதனையும் வௌிக்காட்டாதவாறு கடந்த சனிக்கிழமை மேலதிக நேர வேலைக்கு வருமாறு இலங்கையர்கள் மூவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

எனினும் அவர்கள் தலைமறைவாகி இருந்ததுடன் தேடிக் கண்டுபிடிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் பணத்துடன் மறைந்திருந்த இலங்கையர் மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை துபாய் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.