பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்கள் சட்ட ரீதியாக பதிவு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும், பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யப்படுகின்றன.

கிராம மட்டங்களிலும், ஏனைய இடங்களிலும் இடம்பெறுகின்ற இன்னும், எத்தனையோ பாலியல் வன்முறைச் சம்பவங்கள் வெளிவராமல் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் இன்று தொடர்பு கொண்டு கேட்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வைத்திய சாலைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் பதியப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்களை வைத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளை மட்டிட முடியாது. பல காரணங்களுக்காக இரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

விழிப்புணர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் வன்முறைகளும், கலாச்சார சீர்கேடுகளும் இடம்பெற்றுத்தான் வருகின்றன.

சட்டபூர்வமாக கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், பாலியல் தொழில் செய்வதற்கான அனுமதி வேண்டும், ஓரினச் செயற்கைக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என பலவற்றை அரசியல் யாப்பு திருத்தத்திலும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.

ஏனெனில் இவ்வாறான விடயங்கள் வருமாக இருந்தால் மேலும் வன்முறைகள் குறைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.