சைட்டத்திற்கு எதிரான பேரணி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது

Report Print Suman Suman in சமூகம்

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியான சைட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள வாகன பேரணி இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.

இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், இங்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் 3ஆம் இடத்தில் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் முதலாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியிலிருந்து 100 இலட்சத்தை கொடுத்து கல்வி கற்று, வைத்தியராக முடியுமா? என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனையடுத்து தொடர்ந்தும் முருகண்டியை சென்றடைந்த வாகனப் பேரணி, நாளை காலை வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.