சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியில்

Report Print Yathu in சமூகம்

சைட்டத்திற்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டம் இன்று கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.

குறித்த வாகன தொடரணி இன்று நண்பகல் கிளிநொச்சியை அடைந்துள்ளதுடன்,கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் 3 ஆம் இடத்தில் உள்ளது.

வறுமை மாவட்டத்தில் முல்லைத்தீவு முதலாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இங்கிருந்து எவருக்காவது 100 லட்சம் கொடுத்து கல்வி கற்று வைத்தியராக முடியுமா என குறிப்பிட்டுள்ளார்.

advertisement