மட்டக்களப்பில் சைட்டத்திற்கு எதிராக மாபெரும் வாகன பேரணி

Report Print Kari in சமூகம்

சைட்டத்திற்கு எதிராக மாபெரும் வாகன பேரணி இன்று மட்டக்களப்பு அரச வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் கெளரி சங்கர் தலைமையில் ஆரம்பிக்கப்படுள்ளது.

குறித்த பேரணியானது இன்றைய தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து அம்பாறை வரை செல்வதாகவும், செல்கின்ற இடங்களில் இருக்கின்ற ஆதார வைத்தியசாலைகளின் அதிகாரிகளும் இதில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சகல மாவட்டங்களுக்கும் பேரணியாக சென்று எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பை அடையவுள்ளது.

சைட்டம் என்ற இந்த கல்வி நிலையத்தை நிறுத்த வேண்டும் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு எடுத்து கூறும் வண்ணம் இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.