சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தண்டப்பணம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் நேற்று (11) குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பரந்தன் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்ந்து ஏற்றிச்சென்ற இரண்டு உழவு இயந்திர சாரதிகளையும், டிப்பர் வாகனமொன்றின் சாரதியையும் கிளிநொச்சி பொலிசார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர்களுக்கெதிரான நீதிமன்ற தீர்ப்பின்படி, அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய ஒருவருக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாவும், மற்றயவருக்கு நாற்பதாயிரம் ரூபாவும் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்றவருக்கு அறுபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு, மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.