ரயிலில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலி

Report Print Manju in சமூகம்

மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த நபர் ஒருவர், மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் 2.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஆனந்த ராஜா விஜயகுமார் (வயது 30) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.