தலவாக்கலையில் கோர விபத்து - இருவர் பலி - மூவர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்

தலவாக்கலை லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலியாகி உள்ளனர்.

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹற்றனிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்றுடன் அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.