பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மறுப்பு

Report Print Thamilin Tholan in சமூகம்

எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக் கிடைத்தது.

அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா, மற்றும் இணைச் செயலாளர்கள் சி. கலாராஜ் மற்றும் த. சிவரூபன் ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்று ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம்.

நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள் குறித்து விவாதிக்க விரும்பின் நாங்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதிக்கவும் விளக்கம் தரவும் தயாராகவுள்ளோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement