லிந்துலையில் கோர விபத்து: இருவர் பலி! இருவர் கவலைக்கிடம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்டத்துக்கு முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வித்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தள்ளதுடன் மேலும் மூவர் ஆப்பத்தான நிலையில் லிந்துலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை காலமழை தோட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் சதிஸ் (வயது 15), சந்திரன் பிரபு (23) ஆகிய இருவருமே, விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததோடு அவர்களை நுவரெலியா மாவட்ட வைத்தியாசலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலங்கள் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட மருத்தவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ள லிந்துலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.