இலஞ்சம் பெற்ற அதிபர் கைது! மாத்தறையில் சம்பவம்

Report Print Aasim in சமூகம்

மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக லஞ்சம் பெற்றுக் கொண்ட அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தின் பிரபல்யமான பாடசாலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் அனுமதி கோரி விண்ணப்பித்த மாணவன் ஒருவருடைய பெற்றோரிடம் பாடசாலையின் அதிபர் மாணவனை அனுமதிப்பதற்கு லஞ்சம் கோரியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக அதிகாரிகள் பாடசாலை அருகில் காத்திருந்து அதிபர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்துள்ளனர்.

குறித்த அதிபரை நீதிமன்றத்தில் நிறுத்தி விளக்கமறியலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஊழல் தடுப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.