அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விட ஊழியர்கள் எதிர்ப்பு

Report Print Aasim in சமூகம்

அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விடும் தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள சமூக மற்றும் சமாதானத்துக்கான கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊழியர்கள் ஒன்றியம் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இச்செய்தியாளர் சந்திப்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 24 தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மில்டன் விஜேசுந்தர, அதிவேக நெடுஞ்சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கான திட்டமொன்றை அரசாங்கம் கொண்டுள்ளது.

அதற்கான நாடாளுமன்ற மசோதாவும் மிக விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்துக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக செயற்படுகின்றனர். ஆதரவளிக்கின்றனர்.

எனினும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 99 வீதமான ஊழியர்கள் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்க்கின்றனர் என்றும் மில்டன் விஜேசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.