வித்தியா படுகொலை வழக்கில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிணை! வெளிநாடு செல்வதற்கு தடை

Report Print Murali Murali in சமூகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, 3 லட்சம் ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும், வெளியில் செல்ல அவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அத்துடன், அவரது கடவுச்சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவியதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போது கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி - சுமி


you may like this video

advertisement