காலிமுகத் திடலில் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞரும் ஆசிரியையும் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - காலிமுகத் திடலில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட இளைஞர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 18 வயது எனவும், ஆசிரியைக்கு 44 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஆசிரியையான இந்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரும் குறித்த பெண்ணும் அநாகரிகமாக நடந்து கொண்டதை அங்கு கடமையில் இருந்த பொலிஸார் அவதானித்துள்ள நிலையில் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் இடையில், நீண்டகாலமாக தவறான மறைமுக தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


you may like this video...