வெளிநாட்டில் வேலைவாய்ப்பு! இலங்கை ஒலிம்பிக் வீரரின் மோசடி அம்பலம்

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த முன்னாள் ஒலிம்பிக் ஓட்டபந்தைய வீரர் கொழும்பு ஊழல் மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் இத்தாலியில் தொழில் பெற்று தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஊழல் மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 3 லட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.