மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

Report Print Aasim in சமூகம்

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமான விடுமுறைகளை ரத்துச் செய்துள்ளதாக அவசர அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் இன்று தொடக்கம் இரண்டு நாட்கள் வரை அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவித்தல் விடுத்திருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறித்த வேலைநிறுத்தம் இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருந்தது.

பாவனையாளர்களின் மின்பட்டியலை சீரான முறையில் கணக்கிட்டு மின் கட்டணத்தை அறவிடல், மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் மற்றும் சபையின் ஊழியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய சேமலாப நிதியை வைப்பிலிடுதல் ஆகியனவே மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கையாகும்.

மின்சார சபையின் உயரதிகாரிகளின் சுகபோக செலவுகளை சரிக்கட்டும் வகையில் பாவனையாளர்கள் மீது ஐம்பதுவீத மேலதிகக் கட்டணம் விதிக்கப்படுவதாக மின்சார சபை ஊழியர்கள் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தனர்.

மேலும் மின்சார சபை ஊழியர்களின் சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 2000 மில்லியன் ரூபா இதுவரை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பில் இடப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தமது கோரிக்கைகளை அடையாள வேலைநிறுத்தக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றித் தராது போனால் பதினைந்தாம் திகதி தொடக்கம் தொடர்வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் ​போவதாகவும் மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மின்சார சபை இன்று விடுத்துள்ள அவசர சுற்றுநிரூபத்துக்க அமைய அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி வரை எந்தவொரு ஊழியரும் விடுப்பில் செல்லவோ, கடமைக்குச் சமூகமளிக்காமல் இருக்கவோ முடியாது என்றும் குறித்த அறிவிப்பில் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

advertisement