வவுனியாவை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான வாகனப்பேரணி

Report Print Thileepan Thileepan in சமூகம்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் நேற்று ஆரம்பமான வாகனப்பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.

சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த வாகனப்பேரணி இன்று வவுனியாவில் இருந்து அநுராதபுரத்தை நோக்கி ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா ஏ9 விதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமான வாகனப்பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து, வைரவபுளியங்குளம் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அநுராதபுரம் நோக்கிச் செல்லவுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பன இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றியுள்ளன.

இந்த பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.