சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு வவுனியாவில் உளவள நடவடிக்கைகள்

Report Print Theesan in சமூகம்

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு ஒரு மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள உளநல நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று வவுனியா, விபுலாந்தாக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகள் இன்று காலை 7.30 மணியளவில் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

சர்வதேச உளநல தினம் 2017 ஒக்டோபர் 10 திகதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. 'மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்' என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் இந்த நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மனம் விட்டுப் பேசுவதால் மன இறுக்கமின்றி பேசும் வாய்ப்பு கிடைப்பதுடன் நல்ல உறவுகளைப் பேணி மாணவர்களுக்கு வழி காட்டியாக அமைய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களை விட தமக்கு வழிகாட்டியாக அமைந்த ஆசிரியர்களே மாணவர்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ளனர் என்பதால் ஆசிரிய,மாணவ இடைவெளிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் மனம் விட்டு பேசும் சூழ் நிலையை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிபர் தனது உரையில், பாடசாலை உளநலக் குழுவினர் எடுத்த முயற்சி தொடர்பில் பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும், பொறுப்பாசிரியர் யசோதரன், சிறப்புரை ஆற்றிய மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தருக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் பாடசாலை மாணவர்கள் தமது பிரச்சினைகளை மனம் விட்டு பேசுவதுடன் தம்மிடையே பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement