வவுனியாவில் வெடிமருந்துகள் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Aasim in சமூகம்

வவுனியாவில் இன்று காலை ஒருதொகை வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலமொன்றில் மண் பதப்படுத்தல் நடைபெற்ற நிலையில் இந்த வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தயாரிப்புகளான கைக்குண்டுகள் மூன்று பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் உறைகளில் சுற்றப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட குறித்த ரக கைக்குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துகளை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற்று விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

படங்கள் - சிவா