அர்ஜுன் மகேந்திரனுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

Report Print Aasim in சமூகம்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜுன் மகேந்திரன் பதவி வகித்த காலப்பகுதியில், வங்கியினால் வௌியிடப்பட்ட பிணைமுறிகள் விற்பனையில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவரும், மகேந்திரனின் மருமகனுமான அர்ஜுன் அலோசியஸ் தனக்கு எதிரான விசாரணைகளுக்குச் சமூகமளிப்பதில் இருந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விலக்களிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மகேந்திரனை விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி அவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் ஒரு தடவை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அர்ஜுன் மகேந்திரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.