லக்ஷபான மின்னுற்பத்தி நிலையத்தில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Report Print Aasim in சமூகம்

லக்ஷபான மின்னுற்பத்தி நிலையத்தில் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின்னுற்பத்தி நிலையத்தின் அனைத்து ஊழியர்கள் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள மொத்த ஊழியர்கள் 450 பேரில் 400க்கும் ​மேற்பட்டோர் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக திடீர் மின்தடை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் அதனைச் சமாளிப்பதற்குப் போதுமான ஊழியர்கள் மின்னுற்பத்தி நிலையத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹட்டன் பிராந்திய மின்விநியோக அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக அப்பிரதேச மின்விநியோகம் தொடர்பிலும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.