பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

Report Print Sumi in சமூகம்

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடன் நிறைவேற்ற கோரி இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கற்பூரம் கொழுத்தி, தேங்காய் உடைத்து மின்சார சபை ஊழியர்கள் தமது எதிர்ப்பினையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், சம்பள முரண்பாட்டினைச் சரி செய்யத் தவறியமை, 2015ஆம் வருட முறைகேடான சம்பளக் கொள்ளை மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவின் மீண்டும் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.