மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்து நபரொருவர் வட்டகொடை - மடக்கும்புர, வெவஹென்ன கிராமத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த உண்ணாவிரத போராட்டத்தை மரத்தில் கூடாரம் அமைத்து வெவஹென்ன கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.பந்தல பண்டார என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கு அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை நான் முன்னெடுக்க வேண்டும்.

எனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு நான் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள்.

இந்த மரங்களை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். இதற்கென கடந்த 2016.10.18ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

இந்த அனுமதியை பெறுவதற்காக 12,000 தொடக்கம் 15,000 ரூபா வரையிலான தொகையும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இருந்தும் எனக்கு சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளேன்.

ஆகையால் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளேன். நான் வளர்த்த இந்த மரங்கள் உபயோகத்திற்காக வெட்டும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில் இதற்கு அனுமதியளித்து எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும். அத்துடன் எமது பகுதி கிராம சேவகர் அரசுடன் தொடர்பு கொண்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.