ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஜெனிவா சென்றுள்ள கௌதமனின் வேண்டுகோள்

Report Print Shalini in சமூகம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கோரி ஐ.நா.சபையில் நடக்கும் 36ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஈழ உணர்வாளரும், இயக்குனருமான கெளதமன் ஜெனிவா பயணமாகியுள்ளார்.

சுவிற்ஸர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.சபையில் 36ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ள கௌதமன் தமிழக மாணவர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஐ.நா.வின் அழைப்பை ஏற்று, எங்களின் இழந்த தாயக உரிமைகளை மீட்கவும், கேட்கவும் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஐ.நா.சபையில் பேசுவதற்காக சென்றாலும், என் மனம் முழுவதும் தமிழ்நாட்டையே, தமிழ் மண்ணையே சுற்றிக்கொண்டிருக்கிறது.

ஈழ மண்ணில் இழந்த உயிர்களுக்கு நீதி கேட்கவும், நம்முடைய தாய் தமிழக மண்ணில் தொடர்ந்து பறிக்கப்பட்டிருக்கும், பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நான் உலக அதிகார மன்றமான ஐ.நா.வில் நீதி கேட்டு அங்கு போராடுகிறேன்.

ஐ.நா கூட்டத்தொடர் முடிந்ததும் உங்களோடு வந்து போராட்டத்தில் கலந்துகொள்கிறேன். இப்போது நாம் போராடவில்லை என்றால் மருத்துவம் மட்டும் நம்மை விட்டு போகாது, சட்டப்படிப்பு, கலை, அறிவியல் மற்றும் நமக்கான அனைத்து கல்வி உரிமையும் பறிபோகும் ஆபத்து நம்மை எதிர்நோக்கியுள்ளது.

ஆகவே நம்மை முற்று முழுதாக அழிக்க நினைக்கின்ற மத்திய ஒன்றியத்துக்கு சரியான பாடம் புகட்டி, நமக்கான உரிமையை அனைத்திலும் நமது உரிமைகளை மீட்க தொடர்ந்து போராடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

advertisement