யாழில் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையின் சகல பகுதியைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு யாழ். பண்ணையில் இருந்து வட மாகாண சுகாதார அமைச்சு வரை நடைபவனியாக சென்று அங்கு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வட மாகாண சுகாதார அமைச்சர் குணசீலனைச் சந்தித்து மகஜரொன்றை கையளித்து தமது பிரச்சினைகளை விரிவாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கருத்து தெரிவித்த வட மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்,

இந்தப் பிரச்சினை இரண்டு திணைக்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் இது தொடர்பில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எனினும் இப்பிரச்சினையை சுமூகமாக, சமாதானமான முறையில் தீர்க்கவே நான் முனைகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இதற்கான கால அவகாசத்தை எனக்கு தரவேண்டும் எனவும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களிடம் வட சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.