மைத்திரியிடம் விளையாடிய சிறுமி யார்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Report Print Vethu Vethu in சமூகம்

கடந்த வாரம் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று விளையாடிய சிறுமி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

“மைத்திரி தாத்தா” என கூறிய நிலையில் ஜனாதிபதியிடம் ஓடிய சிறுமியை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்திய போதிலும், ஜனாதிபதி சிறுமியை தன்னிடம் வருவதற்கு அனுமதிக்குமாறு கூறினார்.

அந்த நிகழ்வு நிறைவடையும் வரை ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து விளையாடிய சிறுமி, ஜனாதிபதியின் சொந்த பேத்தி என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் அது உண்மை என உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்க வந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து விளக்கமளித்துள்ளனர்,

தினுல்யா சனாதி என்ற இந்த சிறுமி அவர்களிடம் குடும்பத்தில் மூத்த மகளாகும். அந்த சிறுமி தனது சிறு வயது முதல் ஜனாதிபதியை தொலைக்காட்சியில் காணும் சந்தர்ப்பத்தில் சிரித்த முகத்துடன் பல விடயங்களை கூறியவாறு பார்த்து ரசிப்பார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறுமியின் தந்தை,

“அன்று காலை ஜனாதிபதி எங்கள் பகுதிக்கு வருவதாக தகவல் கிடைத்தது. அப்பா நானும் மைத்திரி தாத்தாவை பார்க்க வேண்டும் என்னையும் கூட்டி சொல்லுங்கள் என மகள் பல முறை கோரினார். அதன் பின்னர் நான் மகளுடன் மிரிஸ்ஹேனவுக்கு சென்றோம். அப்போது ஜனாதிபதி நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதியை கண்டவுடன் அவரிடம் செல்ல வேண்டும் என மகள் அடம்பிடித்தார். அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதனால் மேடைக்கு அருகில் செல்ல முடியவில்லை. எனினும் எனது மகள் மேடைக்கு ஓடிச் சென்றதனை அவதானித்த ஜனாதிபதி அருகில் வர அனுமதிக்குமாறு குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மகள் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து, ஜனாதிபதியும் மகளும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். ஜனாதிபதியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை மகளிடம் நீண்டக்காலமாக காணப்பட்டது. அது நிறைவேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.”

“நானும் தந்தையும், மைத்திரி தாத்தாவை பார்க்க சென்றோம். ஜனாதிபதி தாத்தாவுடன் பேச வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன். மக்கள் கூட்டம் அதிகம் என்பதனால் அவரிடம் செல்ல முடியவில்லை எனினும் நான் ஓடி சென்றதும், ஜனாதிபதி தாத்தா என்னை அழைத்தார். தாத்தாவின் மடியில் அமர்ந்திருந்தேன்.. என அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.