அமெரிக்காவுக்கு கஞ்சா ஏற்றுமதி: ராஜித

Report Print Steephen Steephen in சமூகம்

ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்காக 40 ஹெக்டயர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இங்கு பயிரிடப்படும் கஞ்சா அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் பாதுகாப்பு படையினரிடம் முழுமையான பாதுகாப்பின் கீழ் இங்கிரிய பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் பண்டைய காலத்தில் மருத்துவ குணம் கொண்ட இந்த கஞ்சாவை பயன்படுத்தி பானங்கள், கஞ்சிப் போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.