இலங்கையில் விபத்தில் சிக்கிய பிரித்தானிய பெண்!

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டு பெண் ஒருவரை அழைத்து சென்ற மோட்டார் வாகனம் இன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலியில் இருந்து வந்த இந்த மோட்டார் வாகனம் பண்டாரகம, கெலனிகம 14வது கிலோ மீற்றர் மைல் கல் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் வெளிநாட்டு பெண் மற்றும் மோட்டார் வாகன சாரதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் பிரித்தானியாவை சேர்ந்தவர் எனவும் புகைப்பட கலைஞர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement