அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

Report Print Aasim in சமூகம்

அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சமையல் எாிவாயு விலையை 12 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பிரேரணையொன்றை முன்வைத்திருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிவாயு விலை அதிகரிப்பானது அரசாங்கத்துக்கு பாதகமாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் அமைச்சர்கள் பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும் அடுத்த ஆண்டின் பெப்ரவரி தொடக்கம் சமையல் எரிவாயு விலையை எட்டுவீதத்தினால் மட்டும் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினுள் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் மற்றும் அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை விடுக்கவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.