வீதிக்கு வந்த யானைகளால் போக்குவரத்து பயணிகள் அச்சத்தில்

Report Print Thileepan Thileepan in சமூகம்

நெடுங்கேணி - புளியங்குளம் பகுதியில் காட்டு யானைகள் வீதிக்கு வருவதனால் போக்குவரத்து பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றைய தினம்(13) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சுமார் ஒரு மணித்தியாளம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதேவேளை, குறித்த பாதையில் தினமும் அச்சத்துடனேயே பலரும் பயணங்களை மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாலை வேளைகளில்தான் அப்பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

advertisement