யாழ். பல்கலை ஊழியர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு : நாளை இறுதி முடிவு?

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் எம்மால் கடந்த 08 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா? என்ற இறுதி முடிவு நாளை காலை மேற்கொள்ளப்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா மற்றும் இணைச் செயலாளர்களில் ஒருவரான த. சிவரூபன் ஆகியோரின் கையொப்பங்களுடன் இன்றைய தினம்(13) இரவு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு தவறான தகவல் வெளியிடப்பட்டமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமையாலும், மேலும் இக் கலந்துரையாடல் முடிவை எழுத்துமூலம் தரக் கலந்துரையாடல் குழு மறுத்ததமையும் எமது பொதுச்சபைக்கு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இறுதி முடிவைத் தீவிரமாக ஆராய்ந்த பின்னர் நாளை காலையே மேற்கொள்வது எனப் பொதுச்சபை தீர்மானித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.